
உலகெங்கும் வியாபித்திருக்கும் தமிழ் மக்களுக்கு என் இனிய வணக்கம். அக்டோபர் 2010 இல், குழந்தைகள் வாய்ப்பாடு கற்றலில் உள்ள இடர் பாடுகளையும், அதை கற்பதற்கான ஒரு புதிய அணுகுமுறையும் பற்றி பார்ப்போம்.வாய்ப்பாடு இல்லாத கல்வி திட்டமே கிடையாது. வாய்ப்பாடு தெரியாத குழந்தை மக்கு குழந்தை என்று முத்திரை குத்தபடுகின்றது. எண்கள் ஒன்று, இரண்டு ஆயிரம் வரை கற்று கொண்ட உடன், கூட்டல், கழித்தல் கணக்குகளை கற்று கொள்கிறோம். அடுத்து பெருக்கல், வகுத்தல் கணக்குகளை கற்று கொள்கிறோம்.
பழக்கடைக்கு செல்கின்றோம். ஒரு பழத்தின் விலை 9 ரூபாய். 6 பழத்தின் விலை என்ன? உங்களிடம் 50 ரூபாய் உள்ளது. 6 பழங்கள் வாங்க முடியுமா, முடியாதா?
6 * 9 = 54 என்று சட்டென்று தெரிந்தால்தான் முடிவு எடுக்க முடியும்.
மழைக்காலத்தில் ஒரு குடை வாங்க கடைக்கு செல்கின்றீர்கள். ஒரு கடையில் ஒரு குடையின் விலை 80 ரூபாய் . அதன் தள்ளுபடி 20%. மற்றொரு கடையில் அதே குடையின் விலை 90 ரூபாய். அதன் தள்ளுபடி 30%. எப்படி முடிவு எடுப்பீர்கள்?
இன்று குழந்தைகள், வாய்ப்பாட்டை கற்று கொள்ள தகிடு தத்தினம் போடுகிறார்கள். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது ஒரு இமாலய சவாலாக இருக்கிறது. ஏன்?
அன்றைய காலத்தில் வாய்ப்பாட்டை திரும்ப திரும்ப படித்து தலையில் ஏற்றி கொண்டோம். பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேல் இருந்த மரியாதையாலும், நம்பிக்கையாலும் மற்றும் பயத்தாலும் ஏன் படிக்கவேண்டும் எப்படி படிக்க வேண்டும் என்று கேள்வி கேட்காமலே படித்தோம். ஆனால், இன்றைய குழந்தைகள் அப்படி இல்லை. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்கின்றார்கள். எதற்கும் காரணம் கேட்கின்றார்கள். 6 * 9 = 54 என்று சட்டென்று சொன்னால் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று கேட்கின்றார்கள். குருட்டு மனப்பாடம் செய்ய குழந்தைகள் விரும்பவில்லை. படிப்பது சுவையாகவும் சுகமாகவும் இருக்க வேண்டும் என்று நினைகின்றார்கள். காரணத்தோடும் சிந்தனையோடும் படிக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள். எனவே, குழந்தைகள் வாய்ப்பாட்டை மனனம் செய்வதில் ஒரு புதிய முறையை கையாளவேண்டிய அவசியம் எழுந்துள்ளது. இவைகள் அனைத்தையும் மனதில் கொண்டு இன்றைய குழந்தைகள் விரும்பும் உத்திகளுடன் "எளிதாகக் கற்கலாம் பெருக்கல் வாய்ப்பாடு" என்ற புத்தகத்தை prodigy என்ற புத்தக வெளியீட்டார் மூலம் வெளியிட்டுள்ளேன்.
உதாரணத்திற்காக, 9 ஆவது வாய்பாட்டை கற்பது எப்படி என்று இங்கே விளக்கியுள்ளேன். ஒவ்வொரு வாய்ப்பட்டையும் கற்றுக் கொள்ள சில விதிகள், சில உத்திகள் உள்ளன. அவைகள் குழந்தைகளை சிந்திக்க வைக்கின்றன. விடைகளை அவர்களாகவே கண்டுபிக்க வைக்கின்றன. அதிலும், அதிவிரைவில் கண்டு பிடிக்க வைக்கின்றன. மறந்து போய்விட்டது என்று சொல்வதற்கு வாய்ப்பே கிடையாது. ஏனென்றால், இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள உத்திகள் மூலம் குழந்தைகள் தாங்களாகவே வெகுவிரைவில் சிந்தித்து எந்த நேரத்திலும் விடையை சட்டென்று சொல்லமுடியும்.
வாய்ப்பாடு 9 ஐ உதரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.
9 ஆவது வாய்ப்பாட்டை கற்று கொள்ளும் முன் அறிந்திருக்க வேண்டியவை -
1). 1 முதல் 9 வரை அணைத்து எண்களின் முந்தைய எண்கள்
2). 1 முதல் 10 வரை ஒவ்வோர் என்னையும் 10 ஆக மாற்ற பூர்த்தி செய்யும் எண் தெரிய வேண்டும்.
1 இன் பூர்த்தி எண் 9, அதாவது 1 + 9 = 10
2 இன் பூர்த்தி எண் 8, அதாவது 2 + 8 = 10
3 இன் பூர்த்தி எண் 7, அதவது 3 + 7 = 10
4 இன் பூர்த்தி ஏன் 6, அதாவது 4 + 6 = 10
5 இன் பூர்த்தி எண் 5, அதாவது 5 + 5 = 10
6 இன் பூர்த்தி எண் 4. அதாவது 6 + 4 = 10
7 இன் பூர்த்தி எண் ௩, அதாவது 7 + 3 = 10
8 இன் பூர்த்தி எண் 2, அதாவது 8 + 2 = 10
9 இன் பூர்த்தி எண் 1, அதாவது ௯ + 1 = 10
10 இன் பூர்த்தி எண் 0, அதாவது 10 + 0 = 0
1 ம் 9 ம் ஒரு ஜோடி
2 ம் 8 ம் ஒரு ஜோடி
3 ம் 7 ம் ஒரு ஜோடி
4 ம் 6 ம் ஒரு ஜோடி
5 ம் 5 ம் ஒரு ஜோடி
0 ம் 10 ம் ஒரு ஜோடி
ஓர் ஒற்றை இலக்க எண்ணை 9 ஆல் பெருகினால், விடை யை கண்டறிய அந்த எண்ணின் முந்தைய எண்ணை இடதுபுறத்திலும், அந்த எண்ணின் பூர்த்தி எண்ணை வலதுபுறத்திலும் எடுத்து கொள்ள வேண்டும்.
உதாரணம் - 1 :- 6 * 9 = ??
6 இன் முந்தைய எண் 5 மற்றும் அதன் பூர்த்தி எண் 4. எனவே விடை 54.
உதாரணம் - 2 :- 8 *9 = ??
8 இன் முந்தைய எண் 7 மற்றும் அதன் பூர்த்தி எண் 2, எனவே விடை 72.
இப்பொழுது குழைந்தைகள் தாங்களாகவே 9 ஆவது வாய்ப்பாட்டை படித்துவிடுவார்கள். குறிப்பாக, இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது - இந்த உத்திகள் குழந்தைகளை சிந்திக்க வைத்து விடையை கண்டு பிடிக்க வைக்கிறது. இடையில் இருந்து கேள்வி கேட்டாலும், இந்த விதியை பயன் படுத்தி சட்டென்று அவர்களால் பதிலை கண்டு பிடித்து விடவும் முடியும். உங்கள் குழந்தைகளை பரிசோதித்து பாருங்களேன்!!
இதைப் போன்று 1 முதல் 10 வரை அனைத்து வாய்ப்பாடுகளும் இந்த புத்தகத்தில் படத்துடன் எளிய மொழியில் குழந்தைகளாகவே விரும்பி புரிந்து படிக்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த புத்தகம் கிடைக்கும். விரும்பினால் johnlouismemory@gmail.com அல்லது info@benacademy.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு மின் அஞ்சல் செய்யவும். விலை ரூபாய் 50 + postal charge.
அன்புடன் உங்கள் நினைவாற்றல் வேந்தன்,
ஜான் லூயிஸ்