
உலகெங்கும் வியாபித்திருக்கும் அணைத்து இந்திய மக்களுக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ! இந்த தீபாவளி நல்நாளில் மற்றொரு இனிய செய்தியையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அக்டோபர் 31, 2010 இல் ஹைதராபாத் இல் நடைபெற்ற 2 ஆவது மெமரி சாம்பியன்ஷிப் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்று
வெற்றி கோப்பையை தக்க வைத்து கொண்டுள்ளேன் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் உங்களுடன் தெரிவித்து கொள்கின்றேன்.
இந்தியாவில் உள்ள NIT மற்றும் IIT போன்ற தொழில் நுட்ப கல்லூரிகளில் இருந்து 50 மாணவர்கள் உள்பட மொத்தம் 110 பேர் இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொண்டார்கள். நான் வெற்றி பெற்றதை விட என்னுடன் தமிழகத்தில் இருந்து நான்கு 12 வயது குழந்தைகள் பங்கு பெற்று 13, 16, 18 மற்றும் 60 ஆவது இடம் பிடித்தது எனக்கு தமிழன் என்ற முறையில் மட்டற்ற மகிழ்ச்சியை தருகின்றது. அவர்கள் எதிர்காலத்தில் சாம்பியன் ஆக வருவதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களிடம் உள்ளது. மேலும், அவர்கள் தாங்கள் படிக்கின்ற படிப்பில், செய்கின்ற செயலில் மிக எளிதாக வெற்றி பெறுவார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியும். இப்போட்டியில் கலந்து கொள்ள கொள்ள
கற்கும் உத்திகள், மன ஒருமைப்பாடு, உற்று நோக்கும் திறன், முடிவு எடுக்கும் திறன் போன்ற அனைத்து திறன்களும் வளர்கிறது. படிக்கும் பாடங்கள் சுமையாக இல்லாமல் சுகமாகிறது. உங்கள் குழந்தைகளும் இத்தகைய போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பினால் அதற்கான பயிற்சியை பெற என்னை தொடர்பு கொள்ளுங்கள். Memory is an art and a skill. It can be scientifically trained.
வளைய தளம் : www.benacademy.comமின் அஞ்சல் : info@benacademy.com, johnlouismemory@gmail.comகை பேசி : 9 715 333 175