Sunday, September 19, 2010

பெர்னெட் 30 எண்களை மனப்பாடம் செய்தல்


இந்த வீடியோ வில் 30எண்கள் பெர்னெட்டுக்கு காண்பிக்கப்படுகின்றன. அவைகளை பெர்னெட் ஒரு முறை பார்த்து விட்டு, பிறகு அவைகள் அனைத்தையும் சரியாக நினைவு கூர்ந்து திரும்பச் சொல்லுகிறார்.

அவர் கடை பிடித்த உத்திகள் என்ன?
1. எந்த ஒரு எண்ணையும் படமாக்கி கொள்ளும் "ஒலி உச்சரிப்பு முறை"யை கற்றுக்கொண்டு, எண்களை பார்க்கும் அல்லது கேட்கும் பொழுது அவைகளை உடனடியாக ஒரு படமாக மாற்றி கொள்கின்றார்.
2. எந்த ஒரு விஷயத்தையும் தனது மூலையில் வரிசைகரமாக அடுக்கி வைத்துகொள்ள " பயண முறை" யை பயன் படுத்துகின்றார். இந்த முறை சைமனைடு என்கிற கிரேக்க அறிஞரால் கி.மு 516 ஆம் ஆண்டு அறிமுக படுத்த பட்டது.
3. தான் நினைவில் வைத்து கொள்ளவேண்டிய எண்களின் படங்களை தனது பயண முறையில் உளள முக்கிய இடங்களில் அவைகளை வரிசைகரமாக அடுக்கி வைத்துக்கொள்கிறார்.
4. பிறகு, அவைகளை சரியாக திரும்ப சொல்வதற்காக, தனது பயணத்தை முதல் இடத்தில் இருந்து தொடங்குகிறார். அங்கங்கே பதிய வைத்த படங்கள் வரிசையாக அவர் நினைவுக்கு வருகின்றன.
5. இறுதியாக, அந்த படங்களை " ஒலி உச்சரிப்பு முறை" யை பயன்படுத்தி எண்களாக மாற்றி அந்த எண்களை மிகத் துல்லியமாக சொல்லுகின்றார்.

Saturday, September 18, 2010

இந்தியன் மெமரி சாம்பியன்ஷிப் - 2010

இரண்டாவது இந்தியன் மெமரி சாம்பியன்ஷிப் -2010 போட்டி மீண்டும் ஹைதராபாத் நகரில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி நடை பெற இருக்கின்றது. இந்த போட்டியில் நான் கலந்து கொள்கிறேன். என்னோடு, மேலும் 4 குழந்தைகளும் திருச்சி இலிருந்து கலந்து கொள்கிறார்கள். அவர்களுடைய வயது முறையே 11, 12, 12 மற்றும் 13 ஆகும்.

இது 10 வகையான போட்டிகளை கொண்டது. ஒவ்வொரு போட்டிக்கும் அதிகபட்ச மதிப்பெண்கள் 1000. ஒவ்வொருவரும் ௧0 போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தமாக யார் அதிக மதிப்பெண்கள் பெருகிறார்களோ அவரே வெற்றியாளர்.

1). random words
2). binary digits
3). 5 min random numbers
4). 15 min random numbers
5). 5 min speed cards
6). 10 min multiple deck cards
7). names and faces
8). historical years and events
9).spoken numbers
10). abstract images

இப்பத்து போட்டிகளை பற்றி ஒவ்வொன்றாக அடுத்த அத்தியாத்தில் விளக்குகின்றேன்.

இந்தியாவின் முதல் மெமரி (நினைவாற்றல் ) சாம்பியன் மற்றும் நினைவாற்றல் வேந்தன்

அக்டோபர் மாதம் 11ஆம் தேதி 2009 ஆம் ஆண்டு ஹைதராபாத் இல் உள்ள டெக் சிட்டி இல் நடை பெற்ற இந்தியன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றேன். இந்தியாவின் முதல் மெமரி சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றேன். ஆனால் 2003 ஆம் ஆண்டே இங்கிலாந்து நாட்டில் உள்ள மன்செஸ்டர் மாநகரில் நடை பெற்ற 7 வது மைன்ட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு கிராண்ட் மாஸ்டர் ஆப் மெமரி என்ற பட்டம் பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையும் பெற்றேன்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

Wednesday, September 15, 2010

பாடம்-2 : நினைவற்றால் - அலட்சியம் ஏன்?

பள்ளி குழந்தைகளை எடுத்துக்கொள்வோம். தொடக்க கல்வியில், முக மலர்ச்சியுடனும், சந்தோசமாகவும் கற்றுக்கொள்ளும் அதே குழந்தைகள் மேல் வகுப்புக்கு சென்றதும் படிப்பு என்றாலே கலந்குகின்றர்களே . ஏன்?
தொடக்க கல்வியில் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை அனைத்தையும் வரிசையாக சொல்லும் குழந்தைகள், மேல் வகுப்பில் இரண்டு வரி குறளை மனனம் செய்வதற்கு தகிடு தத்தினம் போடுகிறார்களே. ஏன்?

பொதுவாகவே, குழந்தைகள் எதையும் கற்றுகொள்வதிலும் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுவார்கள். நிறைய கேள்விகள் கேட்பார்கள். எதையும் தானாகவே கற்றுகொள்ளும் தாகம் உள்ளவர்கள் குழந்தைகள்.
அவர்களுக்கு , தாங்களாகவே செய்யத் தெரியாத ஓரு விஷயம் அவர்களின் நினைவாற்றல் நிர்வாகமே.

பள்ளிகள், ஏனோ நினைவாற்றலை மேம்படுத்தும் கலையை குழந்தைகளுக்கு கற்றுகொடுக்க தயக்கம் காட்டுகின்றன. நினைவாற்றல் கலையை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்த அலட்சியம் ஏன்?

மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தலும் எழுதிப்பர்த்தலும் மட்டுமே, நல்ல ஒரு நினைவாற்றல் என்று கருதுகிறார்களோ?

நினைவாற்றல் ஒரு கலை, ஒரு திறமை. எனவே இதை முறையான பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்.

இருப்பினும், அலட்சியம் ஏன்?

Tuesday, September 14, 2010

பாடம்-1 : நினைவாற்றல் நிர்வாகம் - ஏன் அவசியம்?

விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி
அய்ங்ஞானத்தை அளிக்க போறேண்டி
என்று என்றோ ஒரு நாள் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நகைச்சுவையாக பாடிய பாட்டு இன்று நம்மை படாத பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது.
உடம்பு நோக தரையில் அமர்ந்து மாவு ஆட்டிய காலம் அது. சுவிட்ச் ஐ தட்டிவிட்டால் தட்டில் இட்லியும், தொட்டுக்க சட்டினியும் பக்கதில் வந்திடனும் என்று ஒரு கற்பனையில் பாடினான் - விளைவு கிரைண்டர் மற்றும் மிக்சி கண்டு பிடிக்கப்பட்டன.
மாட்டு வண்டியில் சென்ற காலம் அது. மாட்டு வண்டியில் சுவிட்ச் ஐ வைத்து மாமியாருக்கு ஓட்டி ஓட்டி காட்ட போறேண்டி என்றும் பாடினான் - விளைவு ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
பக்கதில் இருக்கும் அடுத்த ஊருக்கே தன் பிள்ளைகளை அனுப்ப பயந்த தமிழ் மக்கள், இன்று அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பல கண்டங்களுக்கும், நாடுகளுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வந்து கொண்டு இருக்கிறோம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கை பேசி மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் வலை கேமரா மூலம் வீட்டில் உள்ளவர்களோடு நேரில் பார்த்து உறவாடிக்கொள்ளலாம் . உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஆகாய விமானம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்து விடமுடியும்.
வித விதமான கணிப்பான்கள், கணனிகள் நம்முடைய வேலை பளுவை எவ்வளவு சுலபமாக்கியுள்ளன.
எத்தனை புது புது கண்டுபிடிப்புகள், ஆராய்சிகள்! நாம் ஒரு சிறய கணிப்பான்-ஐ வாங்கினாலும் சரி, கணணி- ஐ வாங்கினாலும் சரி, தொலைக்காட்சி பெட்டி-ஐ வாங்கினாலும் சரி, அத்தோடு ஒரு கை ஏடும் கிடைக்கின்றது அல்லவா அதை எப்படி இயக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு. ஆனால், இதை எல்லாம் கண்டு பிடித்த நம் மூளை-ஐ எப்படி இயக்குவது என்று நமக்கு ஒரு கை ஏடு கிடைத்துள்ளதா அல்லது இருக்கின்றதா?
அய்ங்ஞானத்தை அழித்து விஞ்ஞானத்தில் வளர்ந்துள்ள நாம், எல்லா துறையிலும் வளர்ந்துள்ளோம்.
"மாட்டு வண்டியில் சென்ற நான், மான்செஸ்டர் மாநகருக்கு பறக்கின்றேன்? .
பக்கத்து ஊருக்கே செல்ல பயந்த நான், பாலை வனத்திலும் சென்று பணிபுரிய துணிந்து விட்டேன்.
கலை வெட்டவே கற்று கொள்ள கஷ்டப்பட்ட நான் , கணணி- பார்த்து விவசாயம் செய்கின்றேன்.
கோவணம் கட்டி இருந்த நான், கோட் சூட் போடுகின்றேன்".
ஆனால், எழுத படிக்க தெரியாமலே எல்லா விசயங்களையும் ஞாபகம் வைத்திருந்த நான், எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள தடுமாருகின்றேனே? ஏன்?
கையால் ஆட்டிய மாவை, கரண்டால் ஆட்டிவிடுகின்றோம். குணப்படுத்த மருந்தே இல்லாத நோயை, வராமலே தடுக்க மருந்தை கண்டுபிடித்து விட்டோம். தேவையான அணைத்து விசயங்களையும் கணனியில் வரிசைகரமாக அடுக்கி வைத்துகொள்ள கற்று கொண்டுவிட்டோம். ஆனால், நம் மூளையில் எப்படி பல விஷயங்களை வரிசைகரமாக அடுக்கி வைத்துகொள்ள ஏனோ எந்த ஒரு வழியும் தெரியாமல் தவிக்கின்றோம்.
இப்படி நமக்கு தேவையான செயல்களை செய்வதற்கு தேவையான அணைத்து இயந்திரங்களையும் கண்டுபிடித்து அதை நிர்வகிக்கவும் கற்றுக்கொண்ட நாம், நமது நினைவாற்றல் நிர்வாகத்தை நிர்வகிப்பதில் ஏனோ கோட்டை விட்டுவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.

நாம் எந்த துறையில் பணிச்செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய திறமைக்கு நினைவாற்றல் ஒரு மிக முக்கிய அளவுகோல் ஆக இருகின்றது.

எனவே, மற்ற துறைகளின் வளர்ச்சியோடு, நமது நினைவற்றல் நிர்வாகத்துறையையும் மேம்படுத்துவோம்.


ஜான் லூயிஸ் யார்?

1960 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள திருச்சி நகரில் பிறந்த நான் இரசாயணம் மற்றும் கல்வியியல் படிப்பில் ஒரு முதுகலை பட்டதாரி. 5 ஆண்டுகள் கெமிஸ்ட் ஆகவும், 17 ஆண்டுகள் ஆசிரியர் ஆகவும் பணி ஆற்றிய நான், கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து ஒரு முழு நேர சர்வதேச நினைவாற்றல் பயிற்சி ஆளராக பணி ஆற்றி வருகிறேன். 500 க்கும் மேற்பட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் "அசத்தும் அசாதாரண நினைவாற்றல் உத்திகள்" பற்றியும் மற்றும் பல தொழில் நிறுவனங்களில் "நினைவாற்றல் நிர்வாக பட்டறை" யையும் இதுவரை நடத்தியுள்ளேன்.

சாதனைகள் -

இந்தியாவின் முதல் நினைவாற்றல் கிராண்ட் மாஸ்டர்
இந்தியன் நினைவாற்றல் சாம்பியன்
லிம்கா புத்தக சாதனையாளர்
நடமாடும் நாள் காட்டி (காலண்டர்)
மனக்கணக்கு கணிப்பான்

என் நினைவாற்றல் பக்கத்திற்கு உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன்

உலகெங்கிலும் உள்ள என் இனிய தமிழ் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம். நினைவாற்றல் போட்டியில் இந்தியாவின் முதல் நினைவாற்றல் வேந்தன் என்றும் இந்தியாவின் முதல் சாம்பியன் என்றும் உங்களிடம் என்னை அறிமுகம் செய்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் உங்களுக்கு என்ன செய்ய முடியும்?
- நினைவாற்றல் உத்திகளை சொல்லித்தர முடியும்
- உங்களையும் சாம்பியன் ஆக்க முடியும், நீங்கள் விரும்பினால் மட்டுமே.
- உங்கள் அன்றாட வாழ்கையில் ஏற்படும் நினைவாற்றல் பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்க முடியும்.
- நினைவாற்றல் உத்திகளை படிப்பில் எப்படி பயன் படுத்த முடியும் என்பதை விளக்கி சொல்லித்தர முடியும்.
- நினை வாற்றல் குறித்து உங்கள் இதர தேவைகளுக்கும் தீர்வை கொடுக்க முடியும்.

Monday, September 13, 2010

நினைவாற்றல் வேந்தன் ஜான் லூயிஸ் சிந்தனையில் இருந்து -

  1. நினைவாற்றல் ஒரு கலை. இதை பயிற்சியின் மூலம் வளர்த்து கொள்ள முடியும்.
  2. நினைவாற்றல் கலைகள் ஒரு ரகசியம் அல்ல. அவைகள் உலகம் அறிந்த ஒரு மிகப்பெரிய உண்மை.
  3. யார் எல்லாம் நினைவாற்றல் உத்திகளை கடைபிடிக்கின்ர்றார்களோ,
    அவர்கள் எல்லோரும் தன் வாழ்ககையில் வெற்றிபெற உறுதியான அஸ்திவாரத்தை கட்டுகிறார்கள்.
  4. ஒரு சிலர் இயற்கையாகவே நல்ல நினைவாற்றலை பெற்றிருக்கின்றார்கள். இதற்கு நாம் நினைக்கும் காரணம் - அவர்களின் முன்னோர்கள் யாரேனும் நல்ல நினைவாற்றலை பெற்றிருந்திருப்பார்கள் அல்லது கடவுள் கிருபையால் நல்ல நினைவாற்றலை பெற்றிருந்திருப்பார்கள்.
  5. மரபு அணுக்கள் வழி அல்லது கடவுள் கருணை மற்றும் சித்தம் எல்லாம் உண்மைதான். அப்படியென்றால் இது இரண்டும் இயற்கையாக அமைய பெறாதவர்கள் நல்ல நினைவாற்றலை பெற முடியாதா? குறிப்பாக, நான் என் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா அல்லது முடியாதா?
  6. முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அறிவியல் ரீதியான பயிற்சியின் மூலம் நல்ல நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
  7. நல்ல நினைவாற்றலை பெற்றவர்கள் எத்தகைய உத்திகளை கடை பிடிக்கின்றார்கள் என்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். அந்த உத்திகளை "முயற்சி மற்றும் பயிற்சி" களின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்.
  8. படிக்கும் மாணவ மாணவிகள் தாங்கள் படிக்கும் பாடங்களை எப்படிபடிக்க வேண்டும் மற்றும் படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை "அசத்தும் அசாத்திய நினைவாற்றல் உத்திகள்" என்ற தலைப்பில் மிகத் தெளிவாக வரும் நாட்களில் உங்களுக்கு ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
  9. தொழில் புரிவோர்கள், தங்கள் பணிகளின் நிமித்தம் நினைவில் கொள்ள வேண்டிய பல விசயங்களை, குறிப்பாக வாடிக்கை யாளர்களின் முகங்கள் மற்றும் பெயர்கள், அன்றாடம் செய்ய வேன்டிய வேலைகள், எண்கள் சம்பந்தப்பட்ட குறிப்புகள், முக்கியமான நாட்கள் மற்றும் கிழமைகள், இன்னும் பல, எப்படி நினைவில் கொள்வது என்றும் வரும் நாட்களில் உங்களுக்கு ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
  10. வீட்டுப் பெண்மணிகள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படி படிப்பில் ஆர்வத்தை ஊட்டுவது, எப்படி பாடத்தை சொல்லிக் கொடுப்பது, படிக்கும் பொழுது மன ஒருமைப்பாட்டை எப்படி கொண்டுவருவது, கணக்கு பாடத்தில் எப்படி பெருக்கல் வாய்ப்பாட்டை படிக்க வைப்பது, மனக்கணக்கை எப்படி ஆர்வமுடன் குழந்தைகளை செய்ய வைப்பது, எழுத்து பிழைகளை தவிரப்பது எப்படி போன்ற பல தலைப்புகளில் ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
  11. எல்லோருக்கும் பொதுவான நினைவு பிசகு ( ஆப்சென்ட்மைன்டெட்நெஸ்) பிரச்சனையை எப்படி தவிர்ப்பது? நினைவு பிசகு ஒரு நோய். இதை எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் இதற்கு மருந்து மாத்திரை ஒன்றும் கிடையாது. ஆனால், எண்ணுடைய எளிய பயிற்சியின் மூலம் மிக எளிதில் குணப்படுத்த முடியும். இதையும் உதாரணங்கள் உடன் விளக்க உள்ளேன்.
  12. இரசாயணம், பௌதீகம், உயரியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை படிப்பது எப்படி என்றும் ஒவ்வொன்றாக சொல்லித்தர போகின்றேன்.
  13. ஒரு புது மொழியை எளிதாக கற்றுக் கொள்வதற்கான புத்தம் புதிய உத்திகளையும் எளிதாக கற்றுத்தர இருக்கின்றேன்.
  14. "இந்தியா விநாடி வினா" போன்ற நிகழ்ச்சிகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் எப்படி தயார் செய்வது என்றும் விளக்கவிருக்கின்றேன்.
  15. இன்னும் பலப்பல. உங்கள் தேவைகளை மின் அஞ்சல் செய்யுங்கள்.