விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டிஅய்ங்ஞானத்தை அளிக்க போறேண்டிஎன்று என்றோ ஒரு நாள் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் நகைச்சுவையாக பாடிய பாட்டு இன்று நம்மை படாத பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது.
உடம்பு நோக தரையில் அமர்ந்து மாவு ஆட்டிய காலம் அது. சுவிட்ச் ஐ தட்டிவிட்டால் தட்டில் இட்லியும், தொட்டுக்க சட்டினியும் பக்கதில் வந்திடனும் என்று ஒரு கற்பனையில் பாடினான் - விளைவு கிரைண்டர் மற்றும் மிக்சி கண்டு பிடிக்கப்பட்டன.
மாட்டு வண்டியில் சென்ற காலம் அது. மாட்டு வண்டியில்
சுவிட்ச் ஐ வைத்து மாமியாருக்கு ஓட்டி ஓட்டி காட்ட போறேண்டி என்றும் பாடினான் - விளைவு ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், கார் மற்றும் பல வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
பக்கதில் இருக்கும் அடுத்த ஊருக்கே தன் பிள்ளைகளை அனுப்ப பயந்த தமிழ் மக்கள், இன்று அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஐரோப்பா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற பல கண்டங்களுக்கும், நாடுகளுக்கும் சர்வ சாதாரணமாக சென்று வந்து கொண்டு இருக்கிறோம். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் கை பேசி மூலம் எப்பொழுது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம். பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தும் வலை கேமரா மூலம் வீட்டில் உள்ளவர்களோடு நேரில் பார்த்து உறவாடிக்கொள்ளலாம் . உலகின் எப்பகுதியில் இருந்தாலும் ஆகாய விமானம் மூலம் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வீடு வந்து சேர்ந்து விடமுடியும்.
வித விதமான கணிப்பான்கள், கணனிகள் நம்முடைய வேலை பளுவை எவ்வளவு சுலபமாக்கியுள்ளன.
எத்தனை புது புது கண்டுபிடிப்புகள், ஆராய்சிகள்! நாம் ஒரு சிறய கணிப்பான்-ஐ வாங்கினாலும் சரி, கணணி- ஐ வாங்கினாலும் சரி, தொலைக்காட்சி பெட்டி-ஐ வாங்கினாலும் சரி, அத்தோடு ஒரு கை ஏடும் கிடைக்கின்றது அல்லவா அதை எப்படி இயக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வதற்கு. ஆனால், இதை எல்லாம் கண்டு பிடித்த நம் மூளை-ஐ எப்படி இயக்குவது என்று நமக்கு ஒரு கை ஏடு கிடைத்துள்ளதா அல்லது இருக்கின்றதா?
அய்ங்ஞானத்தை அழித்து விஞ்ஞானத்தில் வளர்ந்துள்ள நாம், எல்லா துறையிலும் வளர்ந்துள்ளோம்.
"மாட்டு வண்டியில் சென்ற நான், மான்செஸ்டர் மாநகருக்கு பறக்கின்றேன்?
.பக்கத்து ஊருக்கே செல்ல பயந்த நான், பாலை வனத்திலும் சென்று பணிபுரிய துணிந்து விட்டேன்.கலை வெட்டவே கற்று கொள்ள கஷ்டப்பட்ட நான் , கணணி-ஐ பார்த்து விவசாயம் செய்கின்றேன்.கோவணம் கட்டி இருந்த நான், கோட் சூட் போடுகின்றேன்".ஆனால், எழுத படிக்க தெரியாமலே எல்லா விசயங்களையும் ஞாபகம் வைத்திருந்த நான், எதையும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள தடுமாருகின்றேனே? ஏன்?கையால் ஆட்டிய மாவை, கரண்டால் ஆட்டிவிடுகின்றோம். குணப்படுத்த மருந்தே இல்லாத நோயை, வராமலே தடுக்க மருந்தை கண்டுபிடித்து விட்டோம். தேவையான அணைத்து விசயங்களையும் கணனியில் வரிசைகரமாக அடுக்கி வைத்துகொள்ள கற்று கொண்டுவிட்டோம். ஆனால், நம் மூளையில் எப்படி பல விஷயங்களை வரிசைகரமாக அடுக்கி வைத்துகொள்ள ஏனோ எந்த ஒரு வழியும் தெரியாமல் தவிக்கின்றோம்.
இப்படி நமக்கு தேவையான செயல்களை செய்வதற்கு தேவையான அணைத்து இயந்திரங்களையும் கண்டுபிடித்து அதை நிர்வகிக்கவும் கற்றுக்கொண்ட நாம், நமது நினைவாற்றல் நிர்வாகத்தை நிர்வகிப்பதில் ஏனோ கோட்டை விட்டுவிட்டோம் என்றுதான் தோன்றுகிறது.
நாம் எந்த துறையில் பணிச்செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய திறமைக்கு நினைவாற்றல் ஒரு மிக முக்கிய அளவுகோல் ஆக இருகின்றது.
எனவே, மற்ற துறைகளின் வளர்ச்சியோடு, நமது நினைவற்றல் நிர்வாகத்துறையையும் மேம்படுத்துவோம்.