- நினைவாற்றல் ஒரு கலை. இதை பயிற்சியின் மூலம் வளர்த்து கொள்ள முடியும்.
- நினைவாற்றல் கலைகள் ஒரு ரகசியம் அல்ல. அவைகள் உலகம் அறிந்த ஒரு மிகப்பெரிய உண்மை.
- யார் எல்லாம் நினைவாற்றல் உத்திகளை கடைபிடிக்கின்ர்றார்களோ,
அவர்கள் எல்லோரும் தன் வாழ்ககையில் வெற்றிபெற உறுதியான அஸ்திவாரத்தை கட்டுகிறார்கள். - ஒரு சிலர் இயற்கையாகவே நல்ல நினைவாற்றலை பெற்றிருக்கின்றார்கள். இதற்கு நாம் நினைக்கும் காரணம் - அவர்களின் முன்னோர்கள் யாரேனும் நல்ல நினைவாற்றலை பெற்றிருந்திருப்பார்கள் அல்லது கடவுள் கிருபையால் நல்ல நினைவாற்றலை பெற்றிருந்திருப்பார்கள்.
- மரபு அணுக்கள் வழி அல்லது கடவுள் கருணை மற்றும் சித்தம் எல்லாம் உண்மைதான். அப்படியென்றால் இது இரண்டும் இயற்கையாக அமைய பெறாதவர்கள் நல்ல நினைவாற்றலை பெற முடியாதா? குறிப்பாக, நான் என் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா அல்லது முடியாதா?
- முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அறிவியல் ரீதியான பயிற்சியின் மூலம் நல்ல நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
- நல்ல நினைவாற்றலை பெற்றவர்கள் எத்தகைய உத்திகளை கடை பிடிக்கின்றார்கள் என்று ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். அந்த உத்திகளை "முயற்சி மற்றும் பயிற்சி" களின் மூலம் வளர்த்துக்கொள்ள முடியும்.
- படிக்கும் மாணவ மாணவிகள் தாங்கள் படிக்கும் பாடங்களை எப்படிபடிக்க வேண்டும் மற்றும் படித்ததை எப்படி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை "அசத்தும் அசாத்திய நினைவாற்றல் உத்திகள்" என்ற தலைப்பில் மிகத் தெளிவாக வரும் நாட்களில் உங்களுக்கு ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
- தொழில் புரிவோர்கள், தங்கள் பணிகளின் நிமித்தம் நினைவில் கொள்ள வேண்டிய பல விசயங்களை, குறிப்பாக வாடிக்கை யாளர்களின் முகங்கள் மற்றும் பெயர்கள், அன்றாடம் செய்ய வேன்டிய வேலைகள், எண்கள் சம்பந்தப்பட்ட குறிப்புகள், முக்கியமான நாட்கள் மற்றும் கிழமைகள், இன்னும் பல, எப்படி நினைவில் கொள்வது என்றும் வரும் நாட்களில் உங்களுக்கு ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
- வீட்டுப் பெண்மணிகள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படி படிப்பில் ஆர்வத்தை ஊட்டுவது, எப்படி பாடத்தை சொல்லிக் கொடுப்பது, படிக்கும் பொழுது மன ஒருமைப்பாட்டை எப்படி கொண்டுவருவது, கணக்கு பாடத்தில் எப்படி பெருக்கல் வாய்ப்பாட்டை படிக்க வைப்பது, மனக்கணக்கை எப்படி ஆர்வமுடன் குழந்தைகளை செய்ய வைப்பது, எழுத்து பிழைகளை தவிரப்பது எப்படி போன்ற பல தலைப்புகளில் ஒன்று ஒன்றாக விளக்க இருக்கின்றேன்.
- எல்லோருக்கும் பொதுவான நினைவு பிசகு ( ஆப்சென்ட்மைன்டெட்நெஸ்) பிரச்சனையை எப்படி தவிர்ப்பது? நினைவு பிசகு ஒரு நோய். இதை எளிதில் குணப்படுத்த முடியும். ஆனால் இதற்கு மருந்து மாத்திரை ஒன்றும் கிடையாது. ஆனால், எண்ணுடைய எளிய பயிற்சியின் மூலம் மிக எளிதில் குணப்படுத்த முடியும். இதையும் உதாரணங்கள் உடன் விளக்க உள்ளேன்.
- இரசாயணம், பௌதீகம், உயரியல், வரலாறு, புவியியல் போன்ற பாடங்களை படிப்பது எப்படி என்றும் ஒவ்வொன்றாக சொல்லித்தர போகின்றேன்.
- ஒரு புது மொழியை எளிதாக கற்றுக் கொள்வதற்கான புத்தம் புதிய உத்திகளையும் எளிதாக கற்றுத்தர இருக்கின்றேன்.
- "இந்தியா விநாடி வினா" போன்ற நிகழ்ச்சிகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் எப்படி தயார் செய்வது என்றும் விளக்கவிருக்கின்றேன்.
- இன்னும் பலப்பல. உங்கள் தேவைகளை மின் அஞ்சல் செய்யுங்கள்.
Monday, September 13, 2010
நினைவாற்றல் வேந்தன் ஜான் லூயிஸ் சிந்தனையில் இருந்து -
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment